மேலும் செய்திகள்
மணல் கடத்திய கார் பறிமுதல்
28-Sep-2024
கனகம்மாசத்திரம்:ஆந்திர மாநிலத்திலிருந்து உரிய அனுமதியின்றி ஆற்று மணல் திருவள்ளூருக்கு கடத்தப்படுவதாக திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபாலுக்கு தகவல் கிடைத்தது.சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஆற்காடு குப்பம் சிவன் கோவில் அருகே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் சோதனை செய்த போது, எந்தவித அனுமதியுமின்றி ஆந்திராவில் இருந்து ஆற்றுமணல் கடத்தி வந்தது தெரிந்தது.இதையடுத்து லாரி ஓட்டுனர்களான ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்த லோகேஷ் 36, சதீஷ் 30 இருவரை கைது செய்த போலீசார், மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
28-Sep-2024