இரு கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் வசிப்பவர் ஏழுமலை, 60. அதே பகுதியில், மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். கல்லாவில் இருந்த 4,200 ரூபாயை திருடினர்.அதன் அருகே பரணிக்குமார், 41, என்பவர் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றனர். அடுத்தடுத்து இரு கடைகளின் பூட்டை உடைத்த சம்பவத்தால், ஆரம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.