மேலும் செய்திகள்
பைக் திருடியவர் சிக்கினார்
21-Jul-2025
திருத்தணி:இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், போலீஸ் ஏட்டு படுகாயமடைந்தார். திருத்தணி ஒன்றியம், வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 35. இவர், திருத்தணி போலீஸ் நிலையத்தில், தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம், தனது வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில், வெங்கடேசன் காவல் நிலையம் செல்ல, திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, கே.ஜி.கண்டிகை பேருந்து நிலையம் அருகே வந்தபோது, எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில், ஏட்டு வெங்கடேசன் படுகாயம் அடைந்தார் அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தில் சிக்கிய மற்றொரு பைக்கில் வந்தவர், அங்கிருந்து தப்பினார். மருத்துவமனையில், வெங்கடேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
21-Jul-2025