உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டூ- - வீலர்கள் மோதல் இருவர் படுகாயம்

டூ- - வீலர்கள் மோதல் இருவர் படுகாயம்

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, 40. இவர், நேற்று மாலை மகன் தரணி, 12, என்பவருடன், 'ஸ்பிண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கி புறப்பட்டார்.அப்போது, பூனிமாங்காடு அருகே வந்த போது, எதிரே வந்த 'பல்சர்' வாகனத்தில் வந்த கூனிப்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 19, என்பவர் வேகமாக வந்து நேருக்குநேர் மோதினார். இதில், தரணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காயமடைந்த வெங்கடேசன் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராஜா காயமின்றி தப்பினார். கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ