உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டூ - வீலரில் சென்றவர் விழுந்து பலி

டூ - வீலரில் சென்றவர் விழுந்து பலி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி, திருவள்ளூர் சாலையில் வசித்து வந்தவர் சிவன், 52. சென்னையில் அஞ்சல் துறையில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, வேலைக்குச் சென்று விட்டு, 'டியோ' பைக்கில், திருவள்ளூரில் இருந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.பெரிஞ்சேரி அருகே வந்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகன் யுகேந்திரன் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி