உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலையை ஆபத்தாக கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள்

நெடுஞ்சாலையை ஆபத்தாக கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள்

கடம்பத்துார்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையாக சீரமைப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த நெடுஞ்சாலையில் தினமும், 1 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.விரிவாக்க பணிகள், முழுமை பெறாத நிலையில், தேசிய நெடுஞ்சாலையின் பல பகுதிகள், போதிய பாதுகாப்பு இன்றி, விபத்து அபாய பகுதிகளாக உள்ளன.அங்கிருந்து வருபவர்களும், அந்த வழியாக செல்வோரும், சாலை விதிகளை மதிக்காமல், தேசிய நெடுஞ்சாலையின் மீடியனில் பாதை ஏற்படுத்தி கடந்து வருகின்றனர்.குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஆபத்தான முறையில் சாலையை கடந்து செல்வதால் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதேபோல, தண்டலம் பகுதியிலும் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில், ஆபத்தான முறையில் மீடியனை கடப்பதற்காக உள்ள குறுக்கு வழி அனைத்தையும் மூட வேண்டும். சாலை விரிவாகப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ