உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைப்பு திருமழிசை வாகன ஓட்டிகள் அவதி

 பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைப்பு திருமழிசை வாகன ஓட்டிகள் அவதி

திருமழிசை: திருமழிசையில் மாநில நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடை 'மேன்ஹோல்' சேதமடைந்துள்ளதால் பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். திருமழிசை பேரூராட்சியில் உள்ள ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை வழியே தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு கடந்த 2007ல் ஆண்டு சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தால் பாதாள சாக்கடை திட்டப் பணிகள், 40.60 கோடி ரூபாய் செலவில், துவங்கப்பட்டு கடந்த 2019ம் ஆண்டு நிறைவடைந்தது. பணிகள் துவங்கி 12 ஆண்டுகள் கழித்து நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் ஆகியும் இன்று வரை பாதாள சாக்கடை பல பகுதியில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. இதில் திருமழிசை - ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் பாதாள சாக்கடை மேன்ஹோல் சேதமடைந்துள்ளதால், இவ்வழியே செல்லும் பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சில நேரங்களில் போக்குரவத்து நெரிசலில் சிக்கியும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் திருமழிசை பேரூராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ