உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வெடிக்காத ராக்கெட் குண்டு ஊத்துக்கோட்டையில் கண்டெடுப்பு

வெடிக்காத ராக்கெட் குண்டு ஊத்துக்கோட்டையில் கண்டெடுப்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, விவசாய நிலத்தில், வெடிக்காத ராக்கெட் குண்டு கண்டெடுக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆவாஜிப்பேட்டை கிராமத்தில், தனியார் விவசாய நிலத்தில் சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது, ந்லத்திற்குள் இரும்பு பொருள் ஒன்று மறைந்திருப்பதை அந்த விவசாயி கண்டுள்ளார். இதுகுறித்து, கல்பட்டு கிராம நிர்வாக அலுவலர் சோபன் மற்றும் பெரியபாளையம் காவல் நிலைத்திற்கு, அந்த விவசாயி தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வெடிகுண்டு போல் இருந்த அந்த இரும்பு பொருளை கண்டதும் அதிர்ச்சியடைந்தனர். உடனே, வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. அது, ராக்கெட் லாஞ்சருக்கு பயன்படுத்தப்படும் குண்டு என்பது தெரியவந்தது. அதை பத்திரமாக மீட்ட போலீசார், திருவள்ளூருக்கு எடுத்து சென்றனர். கடந்த 2022ம் ஆண்டு, இதேபோல் இப்பகுதியில் இரண்டு இடங்களில் ராக்கெட் லாஞ்சருக்கு பயன்படுத்தப்படும் குண்டு கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !