உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

பெருமாள்பட்டு:பெருமாள்பட்டு பகுதியிலிருந்து புதுச்சத்திரம் வழியாக பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில், வேகத்தடைகளுக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்படாததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டு கிராமம் அமைந்துள்ளது. இங்கிருந்து, புதுச்சத்திரம் வழியாக பூந்தமல்லி மற்றும் திருவள்ளூர் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியாக தினமும், 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலையில் உள்ள 10க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் மீது வெள்ளை நிற வர்ணம் பூசப்படாததால், வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், இந்த நெடுஞ்சாலையில் மின்கம்பங்களும் சாய்ந்த நிலையில் உள்ளன. இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ணம் பூச வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை