உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பயன்பாட்டிற்கு வராத இ - சேவை அரசு பணம் ரூ.1.70 லட்சம் விரயம்

பயன்பாட்டிற்கு வராத இ - சேவை அரசு பணம் ரூ.1.70 லட்சம் விரயம்

திருவள்ளூர்:ஒதிக்காடு கிராமத்தில், அரசு இ - சேவை மையம் கட்டி முடித்து இரண்டு ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமல் அரசு பணம் விரயமாகி வருகிறது.திருவள்ளூர் - தாமரைப்பாக்கம் சாலையில் அமைந்துள்ளது, ஒதிக்காடு கிராமம். திருவள்ளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இக்கிராமத்தில், 800க்கும் மேற்பட்ட வீடுகளில், 2,000 பேர் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட அரசு நலத்திட்ட மையங்கள் அமைந்துள்ளன. மேலும், இங்கு வசிக்கும் கிராமவாசிகள், பல்வேறு சான்றிதழ் பெறுவதற்கு வசதியாக, இ - சேவை மையம் நான்கு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.மேலும், 1.70 லட்சம் மதிப்பில் இக்கட்டடம் கட்டி முடித்தும், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் மூடியே கிடக்கிறது. மேலும், கட்டடத்தின் கழிவுநீர் சேகரிப்பு தொட்டியில் இருந்து, நச்சு கலந்த கழிவு நீர் வெளியேறி, சாலையில் தேங்கி சுகாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது.இதனால், சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளும், மாணவ - மாணவியர் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, திருவள்ளூர் கலெக்டர், அரசு இ - சேவை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை