உயர்கோபுர மின்விளக்கு சீரமைக்க வலியுறுத்தல்
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டைஒன்றியம், வங்கனுார் ஊராட்சிக்கு உட்பட்டவைவங்கனுார், வங்கனுார் காலனி, வங்கனுார் வாரியார் நகர், சிங்கசமுத்திரம் உள்ளிட்டவை. இங்கு, 15,௦௦௦ பேர் வசித்துவருகின்றனர். வங்கனுாரை மையமாககொண்டு, ஜி.சி.எஸ்.கண்டிகை, இ.எம்.ஆர்.கண்டிகை உள்ளிட்ட ஊராட்சிகளும் அமைந்துள்ளன. மூன்று ஊராட்சிகளுக்கு உட்பட்ட, 12 கிராமங்களைசேர்ந்த பகுதிவாசிகள், வங்கனுார் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில்,வங்கனுார் பேருந்து நிலையத்தில் பயணியருக்கான அடிப்படை வசதிகள்கேள்விக்குறியாக உள்ளன. பயணியருக்கான நிழற்குடை மற்றும் கழிப்பறை வசதி பராமரிப்பு இன்றி உள்ளது. மேலும், பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கும் கடந்த சில மாதங்களாக பழுதடைந்துள்ளன. இதனால், இரவு நேரத்தில் பயணியர் இங்கு பேருந்துக்காக அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதிகாலையில் வெளியூருக்கு படிக்க செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.பயணியரின் பாதுகாப்பு கருதி, பேருந்து நிலையத்தில் பழுதடைந்துள்ள உயர்கோபுர மின்விளக்கை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.