உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகராட்சியில் காலி பணியிடங்கள் வளர்ச்சி பணி, வரி வசூல் பாதிப்பு

நகராட்சியில் காலி பணியிடங்கள் வளர்ச்சி பணி, வரி வசூல் பாதிப்பு

திருத்தணி:திருத்தணி நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. இங்கு, 14,000 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன. நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி பணிகள், சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கட்டட அனுமதி மற்றும் குத்தகை போன்ற பல்வேறு வரி இனங்கள் மூலம் செய்து வருகிறது.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நகராட்சி அலுவலகத்தில் அதிகரித்து வரும் காலிப்பணியிடங்களால் வளர்ச்சி பணிகள் மற்றும் வரி இனங்கள் வசூல் செய்வதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.நகராட்சியில், ஒரு உதவி பொறியாளர், ஒரு நகர அமைப்பு ஆய்வாளர், ஒரு நகர அமைப்பு அலுவலர், மூன்று பணி ஆய்வாளர்கள், இரண்டு தட்டச்சர், மூன்று பில் கலெக்டர், இரண்டு இளநிலை உதவியாளர்கள் என மொத்தம், 13 பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன.இதனால் நகராட்சி வரி வசூல் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வளர்ச்சி பணிகள் செய்வதற்கும் முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.எனவே தமிழக அரசு திருத்தணி நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை