உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முருகன் கோவிலில் காலி பணியிடம்: விண்ணப்பிக்க இளைஞர்கள் ஆர்வம்

முருகன் கோவிலில் காலி பணியிடம்: விண்ணப்பிக்க இளைஞர்கள் ஆர்வம்

திருத்தணி: முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் காலியாக உள்ள, 26 பணியிடங்களில் சேர்வதற்கு, ஒன்பது நாளில், 900 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். திருத்தணி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களான மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், திருவாலங்காடு வடராண்யேஸ்வரர் கோவில், சந்தான வேணுகோபாலபுரம், வேணுகோபால சுவாமி ஆகிய கோவில்களில், கூர்க்கா, இரவு காவலர், மிருதங்கம், சித்த மருத்துவர் உள்ளிட்ட 26 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப, ஹிந்து அறநிலையத் துறை ஆணையர் உத்தரவின்படி, திருத்தணி கோவில் நிர்வாகம், கடந்த 5ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கி வருகிறது. இந்த பணியிடங்களில் சேர, ஆறாம் வகுப்பு முதல் இன்ஜினியர்கள் வரை ஆர்வத்துடன் விண்ணப்பம் பெற்று வருகின்றனர். ஒன்பது நாளில், 900 பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர். இதில், 500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர். வரும் 5ம் தேதி விண்ணப் பிக்க கடைசி நாள். இதனால், 30,000 பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ