மேலும் செய்திகள்
பஸ் நிலையத்தில் மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பிய போலீஸ்காரர்
16 minutes ago
சகதியாக மாறிய சாலையால் மாணவ - மாணவியர் அவதி
19 minutes ago
அறுவடை இயந்திரம் உதவியுடன் தொங்கிய மின்கம்பிகள் சீரமைப்பு
20 minutes ago
திருவாலங்காடு,: திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர்.கோவிலில் கோசாலை அமைக்கப்பட்டு, 40க்கும் மேற்பட்ட பசுக்கள் வைத்து கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது. உள்ளூர் வாசிகள் கோவில் நுழைவு வாயிலில் அருகம்புல், காய்கறி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வலுக்கட்டாயமாக புல், காய்கறிகளை வாங்க வற்புறுத்துகின்றனர்.அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 minutes ago
19 minutes ago
20 minutes ago