மேலும் செய்திகள்
டீ குடிக்க இறங்கியவரின் காரை கடத்திய நபர் கைது
17-Mar-2025
மதுரவாயல்:கோயம்பேடு காவல் மாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த மதுரவாயல் காவல் நிலையம், நிர்வாக வசதி, குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக, மதுரவாயல், வானகரம் என, இரண்டு காவல் நிலையங்களாக பிரிக்கப்பட்டன.அதன்படி, வானகரம் பகுதி காவல் நிலையத்தை, சென்னை கூடுதல் கமிஷனர் பிரவஷ்குமார், நேற்று திறந்து வைத்தார்.இந்த காவல் நிலையத்தின் முதல் இன்ஸ்பெக்டராக மகேஷ்வரி பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே சென்னையில், புறக்காவல் நிலையம் உட்பட, 104 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. வானகரம், 105 காவல் நிலையமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.இந்த, காவல் நிலையத்தில் ௩௩ போலீசார் பணிய மர்த்தப்பட்டு உள்ளனர். இவர்கள் சுற்றுபுறத்தில் உள்ள ௫௫ கிராமங்களை கண்காணிப்பர் என, போலீசார் தெரிவித்து உள்ளனர்.
17-Mar-2025