உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தாசில்தார் அறையில் வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்

தாசில்தார் அறையில் வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த கொப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தேரியில், கடந்த 6ம் தேதி தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர், துார்வாரும் பணிக்காக பூமி பூஜை போட்டனர். தகவல் அறிந்த கிராம மக்கள், கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதனிடம் கேட்டனர். அவர், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரித்துள்ளார். அதில், கலெக்டர் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பகுதிமக்கள், கிராம நிர்வாக அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இந்நிலையில், விஸ்வநாதன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், திருவள்ளூர் கோட்டாட்சியரிடம் பேச்சு நடத்தியும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. திருவள்ளூர் தாசில்தார் அறையில், நேற்று 30க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை