உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீரகநல்லுார் சமத்துவபுரம் பூங்கா ஓராண்டாக அதிகாரிகள் பாராமுகம்

வீரகநல்லுார் சமத்துவபுரம் பூங்கா ஓராண்டாக அதிகாரிகள் பாராமுகம்

திருத்தணி,:திருத்தணி ஒன்றியம் வீரகநல்லுார் ஊராட்சியில், 2009ம் ஆண்டு 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம், அப்போதை தி.மு.க., அரசு திறந்து வைத்தது.இப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக, அதே ஆண்டு சமத்துவபுரம் நவீன பூங்கா திறந்து வைக்கப்பட்டது.பூங்காவில் நடைபயிற்சிக்கு பாதை, குழந்தைகள் விளையாட ஊஞ்சல், சரக்கு மேடை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைத்து பயன்பாட்டிற்கு விடப்பட்டது.இதனால், குழந்தைகள் மற்றும் முதியோர் காலை மற்றும் மாலை நேரத்தில் பூங்காவிற்கு சென்று பொழுதுபோக்கியும், குழந்தைகள் விளையாடியும் வந்தனர்.இந்நிலையில், பூங்காவை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கடந்த ஓராண்டுக்கு மேலாக பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.பூங்காவில் செடி, கொடிகள் மற்றும் முட்செடிகள் வளர்ந்துள்ளன. குறிப்பாக, விளையாட்டு உபகரணங்களை சுற்றி செடிகள் வளர்ந்துள்ளதால், குழந்தைகள் விளையாட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.மேலும், விளையாட்டு உபகமரணங்கள் வீணாகும் நிலையும் உள்ளதால், பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, மாவட்ட நிர்வாகம் வீரகநல்லுார் சமத்துவபுரம் பூங்காவை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை