உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காய்கறி சந்தை கழிவுகளால் திருவாலங்காடில் துர்நாற்றம்

காய்கறி சந்தை கழிவுகளால் திருவாலங்காடில் துர்நாற்றம்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஊராட்சியில், திருவள்ளூர் --- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், பி.டி.ஓ., அலுவலகம் எதிரே ஞாயிற்றுக்கிழமை தோறும் காய்கறி சந்தை அமைக்கப்படுகிறது. இச்சந்தைக்கு திருவாலங்காடு, பேரம்பாக்கம், தக்கோலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், விவசாயிகள் உணவு பொருட்கள், காய்கறி கடையமைத்து வியாபாரம் செய்கின்றனர். 300க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படும் நிலையில், சந்தையில் சேகரமாகும் காய்கறி கழிவுகளை ஊராட்சி நிர்வாகம் சரிவர அகற்றுவதில்லை. இதனால் இரண்டு நாட்களாக வெங்காயம், கோஸ், காலிபிளவர், தக்காளி போன்ற காய்கறி கழிவுகள், பி.டி.ஓ., அலுவலகம், பள்ளி எதிரே உள்ள சாலையில் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.இதனால் அப்பகுதியினர், அலுவலகம் செல்வோர் முகத்தை சுழித்தபடி செல்கின்றனர். இந்நிலையில் வாரந்தோறும் சந்தை கழிவுகளை உரிய முறையில் அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி