உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலை பணிக்காக வாகனங்கள் கணக்கெடுப்பு

நெடுஞ்சாலை பணிக்காக வாகனங்கள் கணக்கெடுப்பு

திருவாலங்காடு, தமிழகத்தில் நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகளுக்காக, வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகள் நடப்பது வழக்கம். அந்த வகையில், திருத்தணி தாலுகாவில் உள்ள நெடுஞ்சாலைகளில், நடப்பாண்டிற்கான கணக்கெடுப்பு பணி நேற்று முதல் துவங்கியுள்ளது.இப்பணிகளுக்காக, 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுவர். திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், தனித்தனி குழுவாக பிரிந்து, நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பு செய்கின்றனர்.இதுகுறித்து திருத்தணி நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறுகையில், 'இந்த கணக்கெடுப்பு வாயிலாக வாகன போக்குவரத்து எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சாலைகளில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை