மேலும் செய்திகள்
மழையால் திருவள்ளூர் வடக்கு ராஜ வீதி சாலை சேதம்
19-Oct-2024
கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சென்னை நோக்கிய திசையில், கவரைப்பேட்டை கடந்து பெருவாயல் எல்லை துவங்கும் இடம், விபத்து அபாய பகுதியாக உள்ளது. அந்த இடத்தில், தேசிய நெடுஞ்சாலையின் மீடியனில் பாதை அமைத்து வாகனங்கள் கடந்து வருகின்றனர்.அந்த மீடியன் பகுதி ஏற்றமாக இருப்பதால், அதனை கடக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் கடந்து சென்று வருகின்றனர். தடுமாறாமல் செல்வதில் கவனம் செலுத்தும் வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை. இதனால், விபத்துகளை சந்திக்க நேரிடுகிறது.அதே இடத்தில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை செய்து வரும் நிலையில், ஆபத்தாக கடக்கும் வாகன ஓட்டிகளை கண்டு கொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மீடியனில் ஏற்படுத்தப்பட்ட பாதையை உடனடியாக அடைக்க வேண்டும். மீறி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
19-Oct-2024