மேலும் செய்திகள்
பிரிவு சாலையில் அறிவிப்பு பலகை தேவை
24-Oct-2024
கும்மிடிப்பூண்டி::சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் இரண்டாவது பிரதான சாலை, ஏ.ஆர்.எஸ்., சாலை நுழையும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை அமைந்துள்ளது.அந்த இணைப்பு சாலை வழியாக, தாசில்தார் அலுவலகம், சார்-பதிவாளர் அலுவலகம், கருவூலம், போக்குவரத்து துறையின் ஓட்டுனர் பயிற்சி பிரிவு மையம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மற்றும் சிந்தலகுப்பம் கிராமத்திற்கு செல்ல வேண்டும்.பரபரப்பான அந்த இணைப்பு சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து தொழிற்சாலைகளுக்கு வரும் லாரிகள் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுகின்றன.இதனால் எதிர் எதிரே இரு வாகனங்கள் கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதித்து, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.அங்கு ‛நோ பார்க்கிங்' அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும். நெடுஞ்சாலை ரோந்து போலீசார் முறையாக கண்காணித்து, விதிகள் மீறும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24-Oct-2024