உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இடையூறு ஏற்படுத்திய விஜய் கட்சி போரூரில் 100 பேர் மீது வழக்கு

இடையூறு ஏற்படுத்திய விஜய் கட்சி போரூரில் 100 பேர் மீது வழக்கு

சென்னை,போரூர், சுங்கச்சாவடி முன் தமிழிக வெற்றிக் கழக கட்சியின் சென்னை கிழக்கு மாவட்ட செயலர்பாலமுருகன் என்பவருக்கு வரவேற்பு அளித்து,அக்கட்சியினர் நேற்று முன்தினம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கிரேன் வாயிலாக 15 அடி அளவிலான பிரமாண்ட பூமாலையை அணிவித்தும், பொக்லைன் வாயிலாக மலர்கள் துாவியும் த.வெ.க., மாவட்ட செயலரை வரவேற்றனர்.இந்நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட த.வெ.க., தொண்டர்கள் கொடியுடன் அணி வகுத்தனர். இந்த கொண்டாட்டத்தால், மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில், போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.இந்நிலையில், கொண்டாட்டத்தில் ஈடுபட்ட த.வெ.க.,வைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிர்வா கிகள் மீது, அனுமதி இன்றி கூட்டம் கூடுதல்,போக்குவரத்துக்கு இடையூறு செய்தல் உள்ளிட்டபிரிவுகளின் கீழ், மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை