மேலும் செய்திகள்
திறந்து மூன்றே மாதத்தில் பள்ளி கட்டடம் விரிசல்
01-Feb-2025
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், கொத்தகுப்பம் ஊராட்சியில், கோணசமுத்திரம் செல்லும் சாலையில், சாமுண்டீஸ்வரியம்மன் கோவில் எதிரே கிராம சேவை மைய கட்டடம் அமைந்துள்ளது. இந்த கட்டடத்தில், கிராம சேவை பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படுவதில்லை. இந்த கட்டடம் பராமரிப்பு மற்றும் பயன்பாடு இன்றி சீரழிந்து கிடக்கிறது.தற்போது கரும்பு அறுவடை சீசன் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த கிராம சேவை கட்டடத்தில், கரும்பு வெட்டு தொழிலாளர்கள் தங்கியுள்ளனர்.கிராம சேவை கட்டடத்தின் அறைகளை பயன்படுத்தி வரும் இவர்கள், நுழைவாயில் பகுதியையும் திரை போட்டு மறைத்துள்ளனர். இவர்கள் இந்த கட்டடத்தை உண்டு உறைவிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.சமையல் உள்ளிட்ட அன்றாட வேலைகளையும் இங்கு மேற்கொண்டு வருகின்றனர். எளிதில் தீப்பற்றும் விதமான பிளாஸ்டிக் திரைகளை பயன்படுத்தி சேவை மைய கட்டடத்தை மறைத்துள்ளதால், தீ விபத்து நேரிடும் அபாயம் உள்ளது.பாதுகாப்பு கருதி, கரும்பு வெட்டு தொழிலாளர்களை பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கவும், கிராம சேவை மைய கட்டடத்தை, திட்டத்தின் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தவும் வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
01-Feb-2025