உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாகன நிறுத்துமிடமாக மாறிய கிராம சேவை மையம்

வாகன நிறுத்துமிடமாக மாறிய கிராம சேவை மையம்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், அரும்பாக்கம் ஊராட்சியில், 2013 - --14ம் ஆண்டு, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 13 லட்சத்து, 12,000 ரூபாய் மதிப்பில் கிராம சேவை மையம் கட்டப்பட்டது.இந்த மையத்தை, மகளிர் சுயஉதவிக் குழுவினர் பயன்படுத்தி வந்த நிலையில், சில மாதங்களாக பயன்பாடின்றி மூடி வைக்கப்பட்டுள்ளது.இதை பயன்படுத்திக் கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த சிலர், கிராம சேவை மையத்தில் கார், இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்றியுள்ளனர்.இதனால், அரசாங்க கட்டடம், வாகன நிறுத்துமிடமாக மாறி உள்ளதாகவும், இதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை