உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நீர்த்தேக்க தொட்டி படுமோசம் தொற்று நோய் பரவும் அபாயம்

நீர்த்தேக்க தொட்டி படுமோசம் தொற்று நோய் பரவும் அபாயம்

திருவாலங்காடு:மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு இல்லாமல், பாசி படர்ந்து அசுத்தமாக இருப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் கிராமத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகம் எதிரே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டி மூலம், 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது, நீர் நிரம்பி வழிந்து, தொட்டியின் வெளிப்பகுதி பாசி படர்ந்து அசுத்தமாக காணப்படுகிறது. பராமரிப்பின்றி உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வினியோகிக்கப்படும் தண்ணீரால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த தண்ணீரை குடிக்க பகுதிமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, நீர்த்தேக்க தொட்டியை பராமரிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை