குழாய் பழுதால் வீணாகும் குடிநீர்
திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில் 15 வார்டுகளில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு பல தெருக்களில் குடியிருப்புவாசிகள் பயன்பாட்டிற்கு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்கள் பல இடங்களில் சேதமடைந்தும் வால்வு பகுதியில் பழுதடைந்தும் உள்ளன.இதனால் குடிநீர் வீணாகி வருகிறது.பலமுறை சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுன்றனர். எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரி குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்து சேதமடைந்த குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.