கால்வாயில் வெல்டர் சடலமாக மீட்பு
திருவள்ளூர்:திருவள்ளூர், பெரியகுப்பம் லால்பகதூர் சாஸ்திரி தெரு உள்ள கழிவுநீர் கால்வாயில் ஆண் சடலம் கிடப்பதாக, நேற்று காலை திருவள்ளூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.திருவள்ளூர் நகர போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், திருவள்ளூர் அடுத்த சேலை கிராமத்தைச் சேர்ந்த ஏசு (என்ற) லெனின்ராஜா, 38, என்பது தெரிய வந்தது.மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர், நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு கடைக்கு எதிரில் உள்ள கழிவுநீர் கால்வாய் மேற்புர தடுப்பு மீது தூங்கியுள்ளார். எதிர்பாராத விதமாக தவறி கால்வாயில் விழுந்து இறந்துள்ளார் என, போலீசார் தெரிவித்தனர். திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.