உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவாலங்காடு ஒன்றியத்தில் புற்றுநோய் முகாம் எப்போது?

திருவாலங்காடு ஒன்றியத்தில் புற்றுநோய் முகாம் எப்போது?

திருவாலங்காடு, தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை விரிவாக்க திட்டம் அமல்படுத்தப்படும் என, கடந்த மாதம் அறிவித்தது. திருவள்ளூர் மாவட்டத்தில், மே 9ம் தேதி துவங்கி 45 நாட்கள், இதற்கான முகாம் நடைபெறும் என, மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும் தெரிவித்தன.இதில் வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகிய நோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிய பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அரசு அறிவித்து 39 நாட்களான நிலையில், தற்போது வரை திருவாலங்காடு உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் உள்ளிட்டவற்றில் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெறவில்லை.வழக்கம்போல், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்று, புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. எனவே, திருவாலங்காடு வட்டாரத்தில் விரைவில் புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை