உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சோளிங்கர் கோவில் சாலையில் ரவுண்டானா அமைப்பது எப்போது?

சோளிங்கர் கோவில் சாலையில் ரவுண்டானா அமைப்பது எப்போது?

சோளிங்கர், யோக நரசிம்மர் மலைக்கோவிலுக்கு செல்லும் இணைப்பு சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்மர் மலைக்கோவில் அமைந்துள்ளது. சோளிங்கரில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில், தக்கான்குளக்கரையை ஒட்டி, மலைக்கோவிலுக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சந்திப்பில் வாகன ஓட்டிகளும், மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்களும், சாலையை கடக்க அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே, தக்கான்குளம் அருகே கொண்டபாளையம் இணைப்பு சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி