உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாநில நெடுஞ்சாலையில் பாதசாரிக்கு இடம் எங்கே?

மாநில நெடுஞ்சாலையில் பாதசாரிக்கு இடம் எங்கே?

ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கருக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில், திணமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. இருவழி சாலையான இந்த மார்க்கத்தில், சாலையோரம் பாதசாரிகள் நடந்து செல்லும் மண் சாலை புதர்மண்டி உள்ளது.மேலும், சில பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இதனால், எதிரெதிரே இரண்டு வாகனங்கள் வரும் போது, அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் தார்ச்சாலையை விட்டு ஒதுங்க போதிய இடம் இருப்பது இல்லை.இந்த மார்க்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியை ஒட்டிய பகுதியில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த மார்க்கத்தில், நான்குவழி சாலையாக விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.அந்த பணிகள் நடைமுறைக்கு வரும் முன், விபத்துகளை தடுக்கும் விதமாக சாலையோர ஆக்கிரமிப்புகளையும், செடி, கொடிகளையும் அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை