உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மது பங்கிடுவதில் கணவரிடம் தகராறு: மனைவி தற்கொலை

மது பங்கிடுவதில் கணவரிடம் தகராறு: மனைவி தற்கொலை

ஊத்துக்கோட்டை மது பங்கிடுவதில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ராஜிவ்காந்தி நகரில் வசித்து வந்தவர் தங்கராஜ், 45. இவரது மனைவி லட்சுமி, 36. தங்கராஜ் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் செங்கல் சேம்பரில் வேலை செய்து வந்தார். கணவன், மனைவி இருவரும் ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தனர். கடந்த மாதம் 30ம் தேதி கணவன், மனைவி இருவரும் ஒன்றாக மது அருந்தினர். இருவருக்கும் இடையே மது பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த லட்சுமி தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். கணவர் மீதும் தீ பரவியது.இருவரும் அலறியதில் அங்கிருந்தவர்கள் தீக்காயம் அடைந்த லட்சுமியை மீட்டனர். கணவன், மனைவி இருவரையும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். லட்சுமி மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த லட்சுமி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை