உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக் மீது லாரி மோதி விபத்து கணவன் கண்முன் மனைவி பலி

பைக் மீது லாரி மோதி விபத்து கணவன் கண்முன் மனைவி பலி

திருமழிசை:பைக் மீது லாரி மோதியதில், கணவன் கண்முன்னே மனைவி பலியானார்.பூந்தமல்லி அடுத்த மதுரவாயலைச் சேர்ந்தவர் அன்பழகன், 40. இவர், நேற்று மாலை மனைவி பிரியா, 40, என்பவருடன்,'ஹோண்டா ஆக்டிவா' பைக்கில், புட்லுார் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவில் அருகே சென்ற போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது. இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி பிரியா சம்பவ இடத்திலேயே பலியானார். அன்பழகன் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்த வெள்ளவேடு மற்றும் பூந்தமல்லி போலீசார், சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த அன்பழகன் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !