அத்திமாஞ்சேரிபேட்டையில் சந்தை வளாகம் அமையுமா?
பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு ஒன்றியம், கொடிவலசா ஊராட்சிக்கு உட்பட்டது அத்திமாஞ்சேரிபேட்டை. இந்த கிராமத்தில், 15,000 பேர் வசித்து வருகின்றனர்.கிராமத்தினரின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு, திங்கட்கிழமைகளில் வாரச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. திங்கட்கிழமையில் சந்தையில் விற்பனை செய்யப்படும், பழங்கள், காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களை பகுதிவாசிகள் வாங்கி வைத்து அந்த வாரம் முழுதும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் சாலையில், கல்யாண சுந்தரேசனார் மற்றும் திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் இந்த சந்தை நடத்தப்பட்டு வருகிறது.புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கமும் சந்தைக்கடையாக பயன்படுத்தி கொள்ளப்படுகிறது. சாலையோரத்திலும் கடைகள் நடத்தப்படுகின்றன. இதனால், பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால், மழை, வெயிலில் சந்தையில் கடை நடத்தும் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.சாலையோர கடைகளால் விபத்து நேரிடும் அபாயமும் உள்ளது. வாரச்சந்தைக்காக தனி வளாகம் பாதுகாப்பான பகுதியில் ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.