உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதையின் பிடியில் சிக்கும் மாணவர்கள் உளவியல் ஆலோசனை மையம் அமைக்கப்படுமா?

போதையின் பிடியில் சிக்கும் மாணவர்கள் உளவியல் ஆலோசனை மையம் அமைக்கப்படுமா?

திருவாலங்காடு:திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போதைக்கு அடிமையாவது குறித்த புகார்கள் தொடர்ந்து வருகின்றன. போதையால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு, மாணவர்களையும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுவதால், பள்ளிகளில் உளவியல் ஆலோசனை மையத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது குறித்து புகார்கள் கூறப்படுகின்றன. அதன்படி, மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து, பள்ளி அருகே போதை பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.இது தொடர்பாக, ஆறு மாதங்களில் போலீசாரால் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.மேலும், சமீபத்தில் படிப்பை முடித்த பள்ளி கல்லுாரி, மாணவர்களையும், போதைப் பொருட்கள் சப்ளைக்கு உபயோகப்படுத்த முனைவதாக கூறப்படுகிறது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் ஆலோசனை மையம் அமைத்து, இதற்கென தனியாக ஆசிரியரை நியமனம் செய்து கண்காணிக்க வேண்டும்.மேலும், போதைக்கு அடிமையான மாணவர்களை, இந்த பழக்கத்திலிருந்து விடுபட தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை