உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அனல்மின் நிலைய சாலையில் மின் விளக்கு பொருத்தப்படுமா?

அனல்மின் நிலைய சாலையில் மின் விளக்கு பொருத்தப்படுமா?

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில், வடசென்னை அனல் மின்நிலையம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. சென்னை எண்ணுார், கத்திவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர்.இவர்கள், அங்குள்ள எண்ணுார் - வடசென்னை அனல்மின் நிலைய சாலை வழியாக பயணிக்கின்றனர். இந்த சாலையில் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் தொழிலாளர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.இதை பயன்படுத்தி சமூக விரோதிகள், இருசக்கர வாகன ஓட்டிகளை வழிமடக்கி, சிறு சிறு வழிப்பறிகளிலும் ஈடுபடுகின்றனர்.வடசென்னை அனல் மின்நிலையத்தில் மூன்று நிலைகள் உள்ளன. மேலும், இரண்டு துறைமுகங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு முனையங்கள் அமைந்துள்ளன. பல்வேறு தொழில் நிறுவனங்கள் இருந்தும், இச்சாலையில் மின்விளக்குகள் அமைக்க யாரும் முன்வரவில்லை என, வாகன ஓட்டிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, வடசென்னை அனல்மின் நிலைய சாலையில் மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ