உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரியில் யூரியா தட்டுப்பாடு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா? விவசாயிகள் தவிப்பு

பொன்னேரியில் யூரியா தட்டுப்பாடு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா? விவசாயிகள் தவிப்பு

பொன்னேரி:பொன்னேரி பகுதியில் நெற்பயிருக்கு தேவையான யூரியா கிடைக்காமல், விவசாயிகள் பெரும் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.சொர்ணவாரி பருவத்தில், பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட மீஞ்சூர், சோழவரம், பொன்னேரி பகுதியில், 30,000 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது.ஒரு மாதமாக உழவு, நடவுப்பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டனர். தற்போது நடவு செய்யப்பட்ட நிலங்களில் யூரியா போட வேண்டும். இது, நெற்பயிர்களின் வளர்ச்சிக்கு முக்கிய உரமாக உள்ளது.இவை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், மானிய விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஒரு வாரமாக யூரியா கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகினால், 'ஸ்டாக் இல்லை' எனக் கூறுகின்றனர். பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் சோழவரம் பகுதிகளில் உள்ள, 30 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், யூரியா இருப்பில் இல்லை. தனியார் மருந்து கடைகளுக்கு சென்றால், யூரியாவுடன், வேறு சில மருந்து பொருட்களை வாங்க வற்புறுத்துகின்றனர். இதனால், விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி தவிக்கின்றனர்.உரிய நேரத்தில் யூரியா போடவில்லை என்றால், நெற்பயிர்களின் வளர்ச்சி பாதிக்கும் என, விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, யூரியா தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை