உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் ஒரே மாதத்தில் 60 டூ - வீலர்கள் திருட்டு போலீசார் சாட்டையை சுழற்றுவரா?

திருத்தணியில் ஒரே மாதத்தில் 60 டூ - வீலர்கள் திருட்டு போலீசார் சாட்டையை சுழற்றுவரா?

திருத்தணி வருவாய் கோட்டத்தில் திருத்தணி, திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை ஆகிய சட்டம் - ஒழுங்கு காவல் நிலையங்கள், ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம், ஒரு மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையம் ஆகியவை இயங்கி வருகின்றன. மேலும், திருத்தணியில் டி.எஸ்.பி., அலுவலகமும் உள்ளது.இந்நிலையில், கடந்த ஓராண்டிற்கும் மேலாக குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் பணியில் இல்லாததால், திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.உதாரணமாக, திருத்தணி வருவாய் கோட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கடைகள் மற்றும் வீடுகள் முன் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர்.மேற்கண்ட ஆறு காவல் நிலைய எல்லைக்குள், ஒரு மாதத்தில் குறைந்தபட்சம், 60 - 75 இருசக்கர வாகனங்கள் திருடு போகிறது. ஆனால், திருடு போன இருசக்கர வாகனங்கள் மீட்காமலும், மர்மநபர்களை கைது செய்யாமலும் போலீசார் அலட்சியம் காட்டி வருகின்றனர்.இதனால், திருத்தணி நகரம் மற்றும் ஊராட்சிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு, தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன உரிமையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.பாதிக்கப்பட்ட இருசக்கர வாகன உரிமையாளர்கள் சிலர் காவல் நிலையங்களில் புகார் அளித்தாலும், போலீசார் வழக்கு பதியாமல் அலட்சியம் காட்டுவதாக, பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது தொடர்பாக புகார் அளித்து ஓராண்டுக்கு மேலாகியும், போலீசார் வாகனங்களை மீட்டு தராததால், வாகன ஓட்டிகள் அதிருப்தியில் உள்ளனர்.எனவே, மாவட்ட எஸ்.பி., இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தும், திருடு போன வாகனங்களை கண்டுபிடித்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குற்றப்பிரிவு மாயம்

திருத்தணி காவல் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு எஸ்.ஐ., தலைமையில் இயங்கி வந்த குற்றப்பிரிவு, ஓராண்டிற்கு மேலாக செயல்படவில்லை. அந்த போலீசார் எங்கு சென்றனர் எனவும் தெரியவில்லை. குற்றப்பிரிவு இயங்காததால், திருத்தணி முருகன் கோவில், திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், மர்மநபர்கள் பட்டப்பகலில் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை