உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மக்கள், வியாபாரிக்கு இடையூறு டாஸ்மாக் கடை அகற்றப்படுமா?

மக்கள், வியாபாரிக்கு இடையூறு டாஸ்மாக் கடை அகற்றப்படுமா?

பொன்னேரி:பொன்னேரி அடுத்த திருவேங்கிடபுரம், வேண்பாக்கம் மற்றும் தடப்பெரும்பாக்கம் சுற்றுவட்டார அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் நந்தன் தலைமையில் நடந்த கூட்டத்தில். மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.கூட்டத்திற்கு பின் அவர் கூறியதாவது:'ஆன்லைன்' வர்த்தகம் வாயிலாக, 27 சதவீதம் வணிகர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள வணிகர்களை பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும். தமிழக அரசின் உத்தவிற்கு ஏற்ப வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர் பலகைகள் வைக்க வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு தருகின்றனர். அதேசமயம், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆங்கில பெயர்களை வைத்துள்ளன.அதுகுறித்தும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெருக்கடியான இடங்கள், மார்க்கெட், வணிக வளாகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்.அதேபோல, 'டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்' என, தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். அதை கடைப்பிடித்து டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை, தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ