மேலும் செய்திகள்
நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவை துவக்கம்
31-Aug-2024
திருத்தணி:திருத்தணி கோட்டத்தில், 23 கால்நடை மருந்தகம், ஆறு கிளை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில், திருத்தணி கால்நடை மருந்தகத்திற்கு, தினமும் 100க்கும் மேற்பட்ட கால்நடைகளை விவசாயிகள் அழைத்து வருகின்றனர்.இங்கு, சிகிச்சை மற்றும் செயற்கை கருவூட்டல் உள்ளிட்டவை மருத்துவர் வாயிலாக அளிக்கப்படுகிறது. இதுதவிர தினமும், 1,5-25 செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதுசெல்லப் பிராணிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க, எக்ஸ்ரே, ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனை செய்வதற்கு இங்கு வசதியில்லாததால், சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லுாரிக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தப்படுகிறது.திருத்தணி மருந்தகத்திற்கு, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வருகின்றனர்.திருத்தணி கால்நடை மருந்தகத்தை பன்முக மருத்துவமனையாக தரம் உயர்த்தினால், செல்லப் பிராணிகளுக்கு உயர்தர சிகிச்சை மற்றும் மருந்துகள் அதிகளவில் ஒதுக்கீடு செய்யப்படும்.கால்நடைகளுக்கான அனைத்து சிகிச்சைகளும் இங்கே வழங்கப்படும். மேலும், 24 மணி நேரமும் மருத்துவர்கள் தங்கியிருந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பர்.எனவே, திருத்தணி கால்நடை மருந்தகத்தை பன்முக மருத்துவமனையாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
31-Aug-2024