ஸ்கூட்டர் மீது லாரி மோதி பெண் பலி
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே, பெரியசோழியம்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் சுரேன் மனைவி தனலட்சுமி, 30.நேற்று மதியம், குழந்தைகள் பயிலும் பள்ளியில், கல்வி கட்டணம் செலுத்த இருவரும் யமஹா பேசினோ ஸ்கூட்டரில், சிறுபுழல்பேட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.சிப்காட் சந்திப்பு பகுதியில், லாரி ஒன்று ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், தலையில் பலத்த காயங்களுடன், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில், தனலட்சுமி உயிரிழந்தார்.கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.