உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லோடு வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

லோடு வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

கனகவல்லிபுரம்:திருவள்ளூர் அடுத்த, கனகவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரா, 59. திருமணம் ஆகாமல் வசித்து வந்த இவர், கூலி வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம், வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த, 'டாடா ஏஸ்' லோடு வாகனம், சந்திரா மீது மோதி விபத்துக்குள்ளானது.படுகாயமடைந்த அவரை, உறவினர்கள், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சந்திரா உயிரிழந்தார்.இதுகுறித்து இவரது உறவினர் ஜான்பீட்டர் அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை