மேலும் செய்திகள்
பிரதிஷ்டைக்காக விநாயகர் சிலைகள் பயணம்
23-Aug-2025
திருத்தணி:திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மனைவி ஜிஜிபாய், 59. இவர், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வீட்டில், விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வந்தார். நேற்று முன்தினம் மாலை, விநாயகர் சிலைக்கு முன் குத்துவிளக்கேற்றியபோது, எதிர்பாராத விதமாக ஜிஜிபாய் புடவையில் தீப்பிடித்தது. இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு நேற்று மாலை உயிரிழந்தார். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Aug-2025