உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிணற்றில் பெண் சடலம் மீட்பு

கிணற்றில் பெண் சடலம் மீட்பு

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டையை சேர்ந்தவர் கண்ணப்பன் மனைவி மல்லிகா, 62. கணவரை இழந்த இவர், அதே கிராமத்தில் வசிக்கும் அவரது சகோதரர் தியாகராஜன் வீட்டில் வசித்து வந்தார். நேற்று, வீட்டில் இருந்து வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.இந்நிலையில், பாண்டரவேடு கூட்டு சாலையில் உள்ள விவசாய கிணறு ஒன்றில், பெண் சடலம் ஒன்று மிதப்பதாக, பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்ட போலீசார், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர்.போலீசாரின் விசாரணையில், கிணற்றில் சடலமாக மிதந்தவர், தியாகராஜனின் சகோதரி மல்லிகா என தெரியவந்தது. இது குறித்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ