மேலும் செய்திகள்
இருவரிடம் செயின் பறிப்பு; போலீசார் தீவிர விசாரணை
12-Jun-2025
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கிரிஜா, 63. இவர், நேற்று காலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டூ - வீலரில் வந்த மர்ம நபர், அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.தண்ணீர் கொடுத்து திரும்பும்போது, அவர் அணிந்திருந்த 5 சவரன் செயினை மர்ம நபர் பறித்துக்கொண்டு டூ - வீலரில் தப்பி சென்றார். இந்த சம்பவத்தால், மாதர்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதிரிவேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
12-Jun-2025