திருத்தணி கோவில் மலைப்பாதை சீரமைக்கும் பணி துவக்கம்
திருத்தணி, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் தார்ச்சாலை சீரமைக்கும் பணி துவங்கியது. திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் இரு சக்கர வாகனம், கார், வேன், ஆட்டோ மற்றும் பேருந்துகள் மூலம் வந்து செல்கின்றனர். வாகனங்கள் செல்வதற்காக கோவில் நிர்வாகம் சார்பில், மலைப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மலைப்பாதையில் தார்ச்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இதையடுத்து மலைக்கோவிலுக்கு செல்லும் தார்ச்சாலை சீரமைப்பதற்கு, கோவில் நிர்வாகம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டது. நேற்று காலை, தார்ச்சாலை சீரமைக்கும் பணி துவங்கியது. பணிகள் மூன்று நாட்களில் முடியும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. **