உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிதி ஒதுக்கீடு இன்றி ஊராட்சிகளில் பணி முடக்கம்

நிதி ஒதுக்கீடு இன்றி ஊராட்சிகளில் பணி முடக்கம்

திருவாலங்காடு:நிதி ஒதுக்கீடு இல்லாததால், ஊராட்சிகளில் வளர்ச்சி பணி முடங்கியுள்ளது. திருவாலங்காடு ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு மாநில நிதி குழு மானியம் மற்றும் 15வது நிதி குழு மானியம் ஆகிய இரண்டு நிதி ஒதுக்கீடுகள் உள்ளன. இதில், மாநில நிதி குழு மானியம் மூலம் ஊராட்சிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப, மாதந்தோறும் 75,000 - 3 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி ஊழியர்களுக்கு சம்பளம், தெருவிளக்கு, பொது சுகாதார பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய அரசு சார்பில், 15வது நிதிக்குழு மானியம் மூலம், ஊராட்சிகளின் பரப்பு மற்றும் மக்கள்தொகை அடிப்படையில், ஆண்டிற்கு 20 - 50 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இந்த நிதியை பயன்படுத்தி சமுதாய கழிப்பறை, மகளிர் சுகாதார வளாகம், கான்கிரீட் சாலை, குடிநீர் குழாய் பதித்தல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நிதி ஒதுக்கப்படும். இந்த ஆண்டிற்கான வளர்ச்சி பணிகள் தொடர்பான மதிப்பீடுகள் தயாரித்து அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், தற்போது வரை நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. எனவே, நிதியை விரைந்து விடுவித்து, ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை