மேலும் செய்திகள்
பைக் மீது கார் மோதல் பெண் பலி
22-Sep-2025
ஊத்துக்கோட்டை: பைக் - மினி வேன் மோதிய விபத்தில், தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மெய்யூர் ஊராட்சி, மேட்டுத் தெருவில் வசித்து வந்தவர் ராஜ்குமார், 45. இவரது மனைவி அம்மு. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். வேம்பேடு கிராமத்தில் உள்ள விவசாய பண்ணையில் ராஜ்குமார் பணியாற்றி வந்தார். நேற்று பைக்கில் வெங்கல் சென்று விட்டு, வேம்பேடு சென்று கொண்டிருந்தார். கல்பட்டு அருகே சென்ற போது, எதிரே வந்த மினிவேன் மோதியது. படுகாயமடைந்த ராஜ்குமார், சம்பவ இடத்திலேயே பலியானார். வேன் ஓட்டுநர் தப்பியோடினார். வெங்கல் போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
22-Sep-2025