உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பூந்தமல்லியில் பணிமனை திறப்பு 125 மின்சார பேருந்துகள் இயக்கம்

 பூந்தமல்லியில் பணிமனை திறப்பு 125 மின்சார பேருந்துகள் இயக்கம்

பூந்தமல்லி: சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், மாநகர போக்குவரத்துக் கழகம், புதிய தாழ்தள மின்சார பேருந்துகளை இயக்க, அசோக் லேலண்டின் துணை நிறுவனமான, ஓ.எச்.எம்., குளோபல் மொபிலிடி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே, வியாசர்பாடி பணிமனையில் இருந்து, 120 மின்சார பேருந்துகளும், பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து, 135 மின்சார பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், பூந்தமல்லி பேருந்து பணிமனை, 43.53 கோடி ரூபாய் மதிப்பில், மின்சார பேருந்து பணிமனையாக மேம்படுத்தப்பட்டது. இந்த பணிமனையை, துணை முதல்வர் உதயநிதி, நேற்று திறந்து வைத்தார். மேலும், 214.50 கோடி ரூபாய் மதிப்பில், 45 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதன பேருந்துகளும், 80 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் என, 125 பேருந்துகள் சேவையையும் அவர் துவக்கி வைத்தார்.மின்சார பேருந்தில் உதயநிதி பயணம் செய்தார். இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை