உலக போலியோ தினம் அரசு பள்ளிகளில் போட்டி
திருவாலங்காடு: உலக போலியோ தினத்தை ஒட்டி, திருத்தணி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடந்தது. திருத்தணி ஒன்றியம் மத்துார் ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் , உலக போலியோ தினத்தை ஒட்டி, மாணவர்களிடையே ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், 62 மாணவர்கள் பங்கேற்றனர். அதேபோல, திருத்தணி அடுத்த சுப்பிரமணியபுரம் துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களும் ஓவிய போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டி, திருத்தணி ஸ்டார்ஸ் ரோட்டரி சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை பரிசுகள் வழங்கப்பட உள்ளன.