மேலும் செய்திகள்
கல்லுாரி, பள்ளியில் உலக யோகா தினம்
21-Jun-2025
பொன்னேரி:பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நேற்று உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜெயசகீலா யோகா தினத்தை துவக்கி வைத்தார். பொன்னேரி யோகா மையத்திலிருந்து குமாரிமணி, செல்வம் ஆகியோர் பல்வேறு யோகாசனங்களை பயிற்சிகளை வழங்கினர்.மாணவர்கள், பேராசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர். உடற்கல்வி உதவி இயக்குனர் முனைவர் கண்ணன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தார். இதில், உதவி பேராசிரியர்கள் உட்பட, 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
21-Jun-2025